ஜெயிலிலிருந்து வீட்டிற்கு வந்த கணவர்: வேறொருவருடன் மனைவி! பரிதாபமாக உயிரிழந்த மாமியார்
கணவர் ஜெயிலுக்கு போனதும் மனைவிக்கு வேறொரு திருமணம் செய்து வைத்த மாமியாரை மருமகன் வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விலே பார்லேவில் வசிக்கும் இக்பால் அப்பாஸ் ஷேக்(42) என்பவர் 2011 இல் ஷிகாம் என்ற பெண்ணின் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதுடன், ஷேக் மீது 28 வழக்குகள் இருந்ததால், எட்டு வழக்கில் தண்டனை கிடைத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை புனே எரவாடா சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தனது மனைவியை பார்க்கச் சென்றள்ளார்.
அப்போது அங்கிருந்த அவரின் மாமியார், தனது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், தற்போது மகள் கர்ப்பமாக இருக்கின்றார் என்றும் கூறி ஷேக்கை வெளியே போகும்படி கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஷேக் கடைக்குச் சென்று அரிவாள் ஒன்றினை வாங்கிவந்து மாமியாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்பு கொலை குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிந்த நிலையில், வழக்கு பதிவ செய்து சிறையில் அடைத்துள்ளனர்.