இந்த ராசியில் பிறந்த ஆண்கள் உருகி உருகி காதலிப்பார்களாம் - உங்கள் காதலனும் இந்த ராசியா?
சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தன் காதலியை உருகி உருகி காதலிப்பார்களாம். அந்த வகையில் உங்கள் காதலனும் இந்த ராசியா என்பதை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காதல் மன்மதன் ராசிக்காரர்கள்
காதல் என்பது ஒரு சாதாரண விடயம் அல்ல. அது யார் மேல் வரும் என்பது தெரியாது. ஆனால் ஒருவர் மீது மட்டுமே வரும். பொதுவாக ஆண்கள் தான் தங்கள் காதலை வெளிப்பத்துவார்கள்.
பெண்கள் கொஞ்சம் தயங்குவார்கள். சில ஆண்கள் காதலை வெளிப்படுத்தாமல் இரப்பார்கள். ஒரு பெண்ணை ஒரு ஆண் நேசிக்க தொடங்கினால் அவர்கள் இல்லை என்றால் வாழவே முடியாது எனும் அளவிற்கு காதலிக்க வேண்டும். அது ஆண் பெண் யாராக இருந்தாலும் சரி.
அது தான் காதல். ஒருவர் மேல் வைத்திருக்கும் அன்பு அவர்கள் வார்த்தை மற்றும் அவர்களின் செயலில் தான் வெளிப்படும். எந்த ஒரு மனிதனுக்கு முதன் முதலில் வருவதே காதல்.
இரண்டாம் முறை வருவதெல்லாம் அனேகமானது தேவை தான். இந்த பதிவில் ஒரு பெண்ணை அதாவது தன் காதலியை உருகி உருகி காதலிக்கும் குணம் கொண்ட ஆண் ராசிகாரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
கடகம் - இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே மற்றவர்களின் துன்பத்தை அறியும் சக்தி உள்ளதாம். இதனால் தன் துணையின் எல்லா தேவைகளையும் இவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
சின்ன சின்ன விடயத்திற்கும் அக்கறையாக இருப்பார்கள். சிறு சிறு விடயங்களிலேயே அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.
இவர்களிடம் அன்பு கிடைத்தால் அது முழு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இவர்களிடம் கடலளவு காதல் உள்ளது.
மீனம் - இந்த ராசியில் பிறந்த ஆண்களுக்கு இயல்பாகவே கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
காதல் என்றால் அதற்கு இவர்கள் தான் நிறம். காதலியை பூரணமாக காதலிப்பார்கள். இவர்களை போல யாரும் காதலிக்க முடியாது என கூறும் அளவிற்கு காதலிப்பார்கள்.
இவர்களுக்கு காதல் காற்று போல. இல்லாமல் இருக்க முடியாது. இவர்களுடன் வாழப்போகும் பெண்ணிற்கு காதல் வாழ்க்கை கனவு போல விசித்திரமாக இருக்கும்.
ரிஷபம் - நிலைத்தன்மை, பொறுமை, நம்பிக்கை இந்த ராசிக்காரர்களின் அடையாளம். காதல் உறவைத் தொடங்கினால் அது பாறை போல உறுதியாக வைத்திருப்பார்கள்.
ஒருமுறை நேசித்தால், அந்த அன்பை வாழ்க்கை முழுவதும் காப்பாற்றுவார்கள். இவர்கள் ஒருவர் மேல் வைத்த அன்பை அவ்வளவு சீக்கரமாக மறக்க மாட்டார்கள்.
கடினமான சூழ்நிலையிலும் தங்கள் துணையை விட்டுவிட மாட்டார்கள். “எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்” என்பதே இவர்களின் காதல் கோட்பாடு. இவர்களுக்கு அமையும் காதலி கொடுத்து வைத்தவர்.
துலாம் - துலாம்காரர்கள் சமநிலையை விரும்புவார்கள். காதலிலும் அவர்களுக்கு அது தான் தேவை. அழகு, இனிமை, நேர்மை இவை அனைத்தையும் கலந்து காதலிப்பார்கள்.
இவர்களுடன் இருக்கும் போது வாழ்க்கை ஒரு இனிய இசை போல இருக்கும். தங்கள் துணையை கவர எதையும் செய்வார்கள்.
துணைக்கு பிடிக்காத எந்த ஒரு விடயத்தையும் செய்ய மாட்டார்கள். அவர்களை விட துணைக்கு தான் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)