50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வெழுதிய மாணவன்: திடீரென வைத்தியசாலையில் அனுமதி! என்ன நடந்தது தெரியுமா?
தேர்வெழுத சென்ற மாணவனொருவனை 50 மாணவிகளுக்கு நடுவில் அமரவைக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மயங்கி விழுந்த மாணவன்
பீஹார் ஷெரிஃப் அல்லாமா இக்பாக் கல்லூரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மணி சங்கர். இவர் பீஹார் மாநிலம், நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார்.
அங்கு 50 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்டார்.
இதை அறிந்ததும் பதற்றத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இதனால் மணி சங்கரை அருகில் உள்ள அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 50 மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்ட மாணவன் பயத்தில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.