மாலத்தீவில் இவ்வளவு அழகான இடங்கள் உள்ளதா? புகைப்படங்களுடன் விவரங்கள்
இந்தியாவில் தென் மேற்கு பகுதி எல்லையை அலங்கரிக்கும் தீவு கூட்டத்தை தான் “மாலத்தீவுகள்” என அழைக்கிறோம்.
மாலத்தீவு அரசு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவே சில இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா பயணிகளுக்கான சகல வசதிகளையும் அமைத்து கொடுத்துள்ளது.
தூய்மையான கடற்கரைகளையும், பவளப்பாறைகளையும் இங்கு அதிகமாக காணலாம்.
விடுமுறை நாட்களை ரம்மியமாக மாற்ற பட்ஜெட்டிற்குள் எங்காவது செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட மாலைத்தீவுக்கு செல்லலாம்.
இங்கு வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள், ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்கள் இருக்கின்றன.
இதனால் அமைதியை விரும்பும் பயணிகள் அதிகமாக படையெடுகிறார்கள். சுமாராக 36 தீவுகளைக் கொண்ட இந்த தீவுக்கூட்டத்தில், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என ஏராளமாக அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அந்த வகையில் மாலத்தீவில் கட்டாயம் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. மினிகாய் தீவு
இந்தியாவிலுள்ள அழகை இங்கு பார்க்கலாம். அரேபியக் கடலின் பரந்த பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது மினிகாய் தீவு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவுள்ளது. அதிகமான ஆடம்பரமான ஹோட்டல்கள் உள்ளன.
இதனால் தங்குமிட வசதிகளுக்கு எந்தவித குறையும் வராது. லட்சத்தீவுகளின் தென்கோடியில் அமைந்துள்ள மினிகாய் தீவை அங்குள்ளவர்கள் “மாலிகாவ்” என அழைக்கிறார்கள்.
மாலத்தீவு கலாச்சாரத்தையும் பாரம்பரிய உணவுகளையும் இங்கு பார்க்கலாம். மினிகாய் தீவு கடற்கரைகள் 1885 இல் கட்டப்பட்ட கலங்கரையால் பிரபலமானது என அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
2. அகட்டி தீவு
ஸ்நோர்கெலிங் முதல் கண்ணாடி சவாரி வரை அனைத்தும் அகட்டி தீவில் இருக்கின்றன. விமான நிலையத்திலிருந்து லகூன் கடற்கரையை அடைவதற்கு சரியாக 20 நிமிடங்கள் எடுக்கின்றது.
இந்த தீவில் உள்ளூர் உணவுகள் மற்றும் உலர்ந்த அல்லது புகையூட்டப்படும் டுனா மீனை சுவைப்பது இங்கு பிரபலமாக இருக்கின்றது. இதன் காரணமாக இரவில் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள்.
ஹனிமூன் செல்லும் தம்பதிகள் இரவு பொழுதை அழகாக்க இங்கு துணையுடன் செல்லலாம். குடும்பத்துடன் வரும் போது கண்ணாடி சவாரி செய்வதை தவற விட்டு விடாதீர்கள். விமான நிலையம் பக்கத்தில் இருப்பதால் பயணிகளின் வந்து செல்வது இலகுவாக இருக்கும்.
3. பங்காரம் தீவு
பயணிகள் மாலத்தீவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக இந்த தீவு பார்க்கப்படுகின்றது. இங்கு தேனிலவு பார்த்தல், நீர் விளையாட்டு நடவடிக்கை தனியம்சமாக இருக்கின்றது.
இந்த தீவிலுள்ள கடற்கரை வெள்ளை மணலால் சூழப்பட்டிருக்கும் அத்துடன் கடற்கரை ஆழமற்றதாக இருக்கும். இதனால் பயணிகள் இந்த தீவை “மினி சொர்க்கம்” என அழைக்கிறார்கள்.
குழந்தை, குடும்பத்துடன் வருபவர்கள் இந்த கடற்கரையில் வந்து விளையாடி செல்லலாம். இது போன்ற இடங்களை மாலத்தீவு சென்றால் இந்த இடங்களை பார்க்க மறக்காதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |