மலேசியா சென்றால் இந்த இடங்களை மறக்காம பாருங்க..
பொதுவாக சுற்றுலா என கூறும் போது ஞாபகத்திற்கு வருவது மலேசியா தான்.
இங்கு கோலாலம்பூர் என அழைக்கப்படும் இடத்திற்கு தான் அதிகமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.
இதையும் தாண்டி மலேசியாவில் கடற்கரைகள், தீவுகள் என மனதிற்கினிய வசீரிக்கும் இடங்கள் பல உண்டு. சமீபகாலமாகவே மலேசியாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில் மலேசியாவில் அப்படி என்ன என்ன சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்
1. Langkawi
மலேசியாவின் அழகிய கவர்ச்சிகரமான மிகப்பெரிய கடற்கரை Langkawi, உண்மையிலேயே இது ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மிக முக்கியமாக Pantai Cenang ல் கடற்கரைக்கு அடியே அமைந்துள்ள உலகம் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும், இதுதவிர Temurun நீர்வீழ்ச்சி மற்றும் Langkawi Cable Car பயணமும் மறக்கமுடியாத நினைவலைகளை உண்டாக்கும்.
Image - headout
2. Kuala Lumpur
தலைநகர் இல்லாமல் எந்தவொரு நாடும் பூர்த்தியடைந்து விடாது, முக்கியமான நகரங்களில் கோலாலம்பூருக்கு என்றுமே இடமுண்டு.
பல கலாசாரங்கள் நிறைந்த மக்கள் வாழும் மலேசியாவின் மிகப்பெரிய நகரம் கோலாலம்பூர். இங்கு அமைந்துள்ள Petronas Towers, Batu Cavesல் அமைந்துள்ள இந்துக்களின் பாரம்பரிய கோவில், தெருவோர உணவுகள் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றை ஒருபோதும் ரசிக்காமல் வரவேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |