சர்ச்சைகளுக்கு நடுவே மூன்றாவது திருமணம் செய்த நடிகர் பாலா... வைரலாகும் திருமண புகைப்படம்
மலையாள நடிகர் பாலா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் பாலா
தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தனது அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
பின்பு மலையாள திரையுலகில் நடித்து வந்த இவர், கடந்த 2010ம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது 12 வயதாகும் அவந்திகா என்ற மகளும் உள்ளார்.
பாலா முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், இரண்டாவதாக 2021ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்ததுடன், அவரையும் விட்டு பிரிந்தார்.
மனைவியை பிரிந்தாலும் அவ்வப்போது மகள் மீதான பாசத்தை வெளிக்காட்டி வந்த பாலாவை மகள் கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளதுடன், சர்ச்சையிலும் சிக்கியிருந்தார்.
மூன்றாவது திருமணம்
இந்நிலையில் தனது தாய் மாமன் மகளான கோகிலா என்பவரை நடிகர் பாலா இன்று திருமணம் செய்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள பாவகுளம் கோயிலில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
ரூ.250 கோடி மதிப்புள்ள தனது சொத்துக்களை பாதுகாக்கவும், தன்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும் துணை தேவைப்படுவதால் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளதாக பாலா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிடும்போது, “கோகிலா என்னுடைய உறவினர். 74 வயதான என்னடைய தாயார் திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த ஆசைப்பட்டார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது.
கடந்த காலங்களில் என் மீதும், என் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு உறுதுணையாக இருந்தார். அவரால் தான் என்னுடைய உடல்நலன் மேம்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |