அடுத்த சோகம்.. பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்!
பிரபல மலையாள நடிகரான பாபுராஜ் வாழப்பள்ளி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் வாழப்பள்ளியைச் சேர்ந்த பாபுராஜ் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வந்தார்.
நாடகத் துறையில் சிறந்து விளங்கிய பாபுராஜ், அதன்மூலம் மலையாள திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.
இவர், ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார் பாபுராஜ் வாழப்பள்ளி. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், சிஐஏ, மாஸ்டர் பீஸ், குண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ், மனோஹரம், அர்ச்சனா 31 நாட் அவுட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திடீரென நெஞ்சு வலியால் துடித்த இவரை குடும்பத்தினர்கள் உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
பாபுராஜின் திடீர் மரணம் மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.