உலகப் பிரபலமான மலாலாவின் கணவர் யார் தெரியுமா? வெளியான அழகிய தம்பதியின் வைரல் புகைப்படங்கள்
சிறிய வயதில் நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப்சாய்க்கு பிரித்தானியாவில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.
பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் மீது தாலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.
தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார், தொடர்ந்து பெண்களின் கல்விக்காக போராடி வரும் மலாலா யூசுப்சாய்-க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ள மலாலா, இன்று என் வாழ்வில் ஒரு பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம்.
எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் திருமணம் செய்து கொண்டோம், உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். எங்கள் பயணத்தில் ஒன்றாக முன்னோக்கி நடப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார்.
யார் இந்த அசர் மாலிக்?
இவரது கணவர் பெயர் அசர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவி வகித்து வருகிறார்.
லாகூர் பல்கலைகழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பான படிப்பினை முடித்துள்ளார்.
மேலும் Coca Cola மற்றும் FrieslandCampina போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒருவருக்கொருவர் அறிமுகமானாலும், வெளிஉலகுக்கு தெரியப்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
2019ம் ஆண்டு அசர் மாலிக் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்தில், மலாலாவுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.