பூரி சப்பாத்திக்கு ஒருவாட்டி இப்படி குருமா செய்ங்க - நீங்களே ஆச்சரியப்படுவீங்க
பூரி, சப்பாத்தி என்றாலே வழக்கமாக ஒரே மாதிரியான குருமா அல்லது மசாலா தான் நம்மால் செய்யப்படும். ஆனால் இன்றைய பதிவில் இதை வேற மாதிரியாக பார்க்கலாம்.
சிலர் இதை பச்சை குருமா என்றும் அழைக்கிறார்கள். நீலகிரி பகுதியில் உள்ள பல உணவகங்களில் இந்த குருமா சிறப்பாக வழங்கப்படும். அதனால் தான், அடுத்தமுறை வீட்டில் பூரி அல்லது சப்பாத்தி செய்யும் போது இந்த குருமாவை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- ஒரு கொத்து கொத்தமல்லி
- அதைவிட சிறிது புதினா
- அரை கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் கசகசா
- 5 முந்திரி
- 4 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 ஏலக்காய், 1 பட்டை, 1 பிரியாணி இலை, 4 கிராம்பு
- 2 நடுத்தர வெங்காயம் (நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்
- காய்கறிகள் – காளி ஃபிளவர், பச்சை பட்டாணி, 1 கேரட்,
- 1 உருளைக்கிழங்கு
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் தயிர்
- உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் கொத்தமல்லி, புதினா, தேங்காய், கசகசா, முந்திரி, பச்சை மிளகாயை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கி, சிறிது உப்பு சேர்க்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் காய்கறிகளை (காளி ஃபிளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு) சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் அரைத்த பச்சை பேஸ்ட், தயிர் சேர்த்து கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு மூடி 8-10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |