கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த கஞ்சியை வாரத்தில் 2 முறை குடித்தால் போதும்
இப்போது எல்லோரும் டயட்டில் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு கூடுதலாக அவர்கள் சாப்பிடும் ஒரு உணவு பாண் தான். நாம் என்னதான் சாப்பிட்டாலும் அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே அது வெலை செய்யும்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பது கடினம். ஆனால் நம் உணவு முறையை வைத்து கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். இந்த பதிவில் சத்துக்கள் நிறைந்த கொள்ளு கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கப்போகிறோம்.
இந்த கொள்ளு கஞ்சியை வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால், உடம்பில் தேங்கியுள்ள விடாப்பிடியான கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவி புரியும்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1/4 கப்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- அவல் - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 4 1/2 டம்ளர் + 1 டம்ளர்
- தயிர் - 1 கப்
- உப்பு - 1 டீஸ்பூன்
- வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொள்ளு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதனுடன் வெந்தயத்தையும் சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் அவலை சேர்த்து அதையும் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு விதைகள், வெந்தயம் மற்றும் அவலை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரில்நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கொள்ளு கஞ்சி பொடியை சேர்த்து கட்டிகளின்று கலந்து விட வேண்டும்.
பின் குக்கரை மூடி 3-4 விசில் வந்ததும் இறக்க வேண்டும். பின்னர் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறி விட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கப் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 1 டம்ளர் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து, நன்கு மோர் போன்று அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அடித்து வைத்துள்ள மோரை கஞ்சியுடன் சேர்த்து கலந்து வறுத்த சீரகப் பொடியை தூவி கிளறினால், சுவையான கொள்ளு கஞ்சி தயார். இதை குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை குடிக்கலாம். உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |