கால் பிடிப்பை அடியோடு விரட்டும் காரசாரமான 'முருங்கைக்காய் ரசம்' எப்படி செய்வது?
நமக்கு நோய் வராமல் தடுப்பதற்கு உணவை சரிவர சாப்பிடுவது அவசியம். நாம் சத்தான உணவுகளை உட்கொண்டால் தான் நமது வாழ்வு மேன்படும். முருங்கைக்காய் உணவாக பலரும் பயன்படுத்துவார்கள்.
இந்த மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை.முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. பலரும் கால் வலி இடுப்புவலி போன்றவற்றால் சிரமப்படுவார்கள். இதற்காக முருங்கக்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய் – 2
- தக்காளி – 4 (விழுதாக அரைக்கவேண்டும். மிக்ஸியில் அரைக்கலாம் அல்லது கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளலாம்)
- புளி – எலுமிச்சை அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
- பருப்புத் தண்ணீர் – ஒரு டம்ளர்
- வர மிளகாய் – 2
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- பூண்டு – 10 பல்
- வெல்லம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – ஒரு கொத்து
- தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – சிட்டிகை
செய்முறை
முருங்கைக்காயை ஒரு அங்குல அளவான நீளத்தில் வெட்டி தண்ணீர் ஊற்றி வேக வைத்து தனியே எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் மிளகு, சீரகம், வரமிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் பாத்திரம் உன்றை வைத்து எண்ணெய்ஊற்றி அது சூடானவுடன், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும். அது பொரிந்தவுடன், தக்காளி விழுது சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து இடித்து அல்லது அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, வேகவைத்த முருங்கைக்காயை தண்ணீருடனே சேர்க்கவேண்டும். வேகவைத்த முருங்கைக்காயை அந்த தண்ணீருடனே சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
அடுத்து புளிக்கரைசல், பருப்புத் தண்ணீரை சேர்க்கவேண்டும். பூண்டை நசுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், வெல்லம், உப்பு சேர்த்து ஒரு கொதி திரண்டதும் மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவேண்டும். இப்படி செய்து எடத்தால் சுவையான காரசாரமான முருங்கக்காய் ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |