Kathirikai Kara Kulambu: மணக்க மணக்க கத்தரிக்காய் காரக்குழம்பு
சமையல்களில் குழம்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. நீங்கள் பல வகையான காரக்குழம்புகளை செய்திருப்பீர்கள்.
உங்களுக்கு பிடித்த வகையில் சுவையாகவும் சுலபமாகவும் கத்தரிக்காய் காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த காரக்குழம்பை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் தோசை மற்றும் உங்களுக்கு பிடித்த உணவுடன் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணை - 4 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- காஞ்ச மிகளாய் - 2
- பெரிய வெங்காயம் -1
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- சின்ன வெங்காயம் - 25
- பூண்டு பல்லு - 25
- தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
- தண்ணீர் -1 கப்
- புளி தண்ணீர் -1 கப்
- கத்தரிக்காய் - 4
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி அதில் நல்லெண்ணை, கடுகு, சீரகம், வெந்தயம், காஞ்ச மிகளாய், பொடியாய் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் வதங்கி வரும் பதத்தில் சின்ன வெங்காயம், பூண்டு இது எல்லாம் ஐந்து நிமிடங்கள் வதங்கியவுடன் பொடியாய் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள்தூள், தனியாத்தூள், சாம்பார் பொடி போன்ற மசாலா பொருட்களை சேர்த்து கலந்து விட்டவுடன் தண்ணீர் சேர்த்து கிண்ட வேண்டும்.
பின்னர் தாழித்த எண்ணை பிரிந்து வரும் நிலையில் புளித்தண்ணியை சேர்த்து இதனுடன் இன்னுமொரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு கத்தரிக்காய் அவிந்தவுடன் இறக்கினால் சுவையான கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்.