குளிர்காலத்தில் அடிக்கடி கை வறண்டு போகுதா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்
பொதுவாக குளிர்காலங்களில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
இதனால் கைகளில் சொரசொரப்பு, வெடிப்பு, வரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
ஒரு சில எளிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலமாக குளிர்காலத்திலும் நமது கைகளை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.
அப்படியாயின் கைகளை குளிர்ச்சியாக வைத்து கொள்ள என்னென்ன டிப்ஸ்களை பின்பற்றலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
குளிர்ச்சியாக வைத்து கொள்ள சில டிப்ஸ்
1. குளிர்காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது காலநிலையால் ஏற்படும் வரட்சியை கட்டுபடுத்தும்.
2. கைகளை சுடு தண்ணீருக்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி கழுவவும். ஏனெனில் சுடு தண்ணீர் கைகளை விரைவாக வறட்சியாக்கும்.
3. கைகளை கழுவும் போது மாய்ஸ்ரைசிங் சோப்பு பயன்படுத்துவது சிறந்தது.
4. சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து வீட்டிலேயே எளிமையான முறையில் ஸ்கரப் ஒன்றை தயாரித்து பயன்படுத்துங்கள். இந்த முறையில் கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் வரட்சியை போக்கலாம்.
5. கைகளை கழுவிய பின்னர் நல்ல தரமான ஹைட்ரேட்டிங், ஹேண்ட் கிரீம் அல்லது லோஷனை பயன்படுத்தவும்.
6. இரவு முழுவதும் ஈரப்பதம் வெளியேறாமல் இருப்பதற்கு காட்டன் கிளவுஸை பயன்படுத்தவும். இது கைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |