சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.
நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலில் இரந்த வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக இயங்காத பட்சத்தில், உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு நிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இவ்வாறான அறிகுறிகள் தொடர்பவில் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல் கட்ட அறிகுறிகள்
பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் காணப்படும் வீக்கம் சிறுநீரக பாதிப்பின் முதல் கட்ட அறிகுறியாக காணப்படுகின்றது.
எடிமா என்றும் அழைக்கப்படும் இந்த நிலை சிறுநீரகங்கள் கழிவு பொருட்கள் மற்றும் இரத்தத்தில் இருந்து அதிகப்படியான திரவத்தை வடிகட்ட சரியாக வேலை செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.இந்த அறிகுறியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.
இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் இது நோக்டூரியா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும்.
சிறுநீரக செயல்பாடு குறைதல், திரவம் தக்க வைக்கும் தன்மை குறைதல் போன்றவற்றின் அறிகுறியாகவே இது காணப்படுகின்றது.
உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்றும், மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றும் நீங்கள் உணர்ந்ததால், இரவில் நல்ல தூக்கத்தை அனுபவிக்க முடியாமல் போகும்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோமருலர் வடிகட்டுதல் அளவு குறைவதன் காரணமாக பசியின்மை அல்லது கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு அடிக்கடி ஏற்படும். உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த பிரச்சினை தோன்றுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத போது தோன்றும் ஒரு எச்சரிக்கை அறிகுறி இரவில் சரியாக தூங்க முடியாமல் போவது.
தூக்கமில்லாத இரவுகள் வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும் ஏற்படலாம். எனினும், மேற் கூறிய அறிகுறிகளோடு தூக்கமின்மையும் இருந்தால் இது சிறுநீரகம் செயலிழப்புக்காக அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் அதனை ஒரு போதும் அலட்சியப்படுத்தக்கூடாது.உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ளாத பட்சத்தில் அபாயாரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |