ஊரடங்கு தேவையில்லை... பரபரப்பை ஏற்படுத்திய மகாராஷ்டிரா முதல்வர்!
இந்தியாவில் கொரொனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், ஊரடங்கு தேவையில்லை என கூறிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 லட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான தகவலில் 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாகவும் அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது என்றும் ஊரடங்கு கடுமையாக்க தேவை இருக்காது என்றும் மகாராஷ்டிரா முதல்வர் கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒவ்வொருநாளும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று அம்மாநிலத்தில் 62,919 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர் என்பதும், அவர் கூறி இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.