வீட்டில் ரவையும், பாலும் இருக்கா? அப்போ வெறும் 5 நிமிடங்களில் மக்கண்டி அல்வா பண்ணலாம்!
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அடிக்கடி ஏதாவது இனிப்பு பண்டங்கள் வாங்கி தர சொல்லி குழந்தைகள் தொல்லை செய்வது இயல்பு தான்.
ஆனால் கடைகளில் இனிப்புகளை வாங்கிக்கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கித்துக்கு சுகாதாரத்துக்கு நல்லதல்ல.

அப்படியான நேரங்களில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே மிகவும் குறுகிய நேரத்தில் மக்கண்டி அல்வா எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை- 1 கப்
பால் - 2 கப்
நெய்- தேவையான அளவு
விருப்பமான நட்ஸ் - தேவையான அளவு
சர்க்கரை - 1 கப்

செய்முறை
முதலில் ஒரு கப் ரவையை 2 கப் பாலில் குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் (non-stick சிறந்தது) தேவையான அளவு நெய் சேர்த்து விருப்பமான நட்ஸ்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் இருக்கும் நெய்யுடன் ஒரு கப் சர்க்கரையைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து, நீர் சேர்க்காமல் கரையும் வரை கிளற வேண்டும்.
சர்க்கரை பொன்னிறமாக (light brown) கேரமல் ஆகும் வரை நன்றாக கலந்துவிட்டு, பின்னர் பாலில் ஊறிய ரவையை சேர்த்து, கட்டிகள் சேராமல் கிளறிவிட வேண்டும்.
அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் பதம் வரை சுருள கிளறிவிட்டு இறுதியாக வறுத்த நட்ஸ்களை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் வாயில் வைத்தவுடன் கரையும், அருமையான சுவையில், மக்கண்டி அல்வா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |