Mahanadhi: அனைத்தையும் இழந்த விஜய்.. பேச வழியில்லாமல் தவித்த காவேரி.. மாமியார் மனம் மாறுமா?
காவேரியுடன் சேர்ந்து வாழ்வதற்காக தன்னுடைய குடும்பம், சொத்து என அனைத்தையும் தூக்கி வீசிய விஜய், மாமியாரின் ஒத்த வார்த்தைக்காக வாசலில் காத்திருக்கிறார்.
மகாநதி
பிரபல தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.
இந்த சீரியலில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பு, சண்டை, ஆதரவு ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகிறது.
மனநிலை சரியில்லாமல் இருக்கும் வெண்ணிலா மீது இரக்கப்பட்டு காவேரி செய்த விடயம், அவருடைய வாழ்க்கையையே பாதித்தது. ஒரு வழியாக வெண்ணிலா பிரச்சினை முடிவுக்கு வரும் பொழுது இன்னொரு பிரச்சினை கிளம்பியுள்ளது.
அதாவது பதுபதியின் அலப்பறைகளுக்கு பயந்த விஜய் வீட்டில் உள்ளவர்கள் விஜய்க்கும் காவேரிக்கும் விவாகரத்து வாங்கிக் கொடுத்து விடலாம்.
விஜய்க்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் காவேரியின் குடும்பத்தினர் சென்று உங்களுடைய மகளை நீங்களே வைத்து கொள்ளுங்கள். விஜய்க்கு விவாகரத்து வேண்டும் என கேட்கின்றனர்.
வாசலில் காத்திருக்கும் விஜய்
இந்த நிலையில், விஜய்யின் குழந்தையை சுமக்கும் காவேரி விஜய்க்காக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுகிறார். இந்த விடயம் விஜய்யின் தாத்தாவிற்கு தெரியாது.
தன்னுடைய பேரன் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து பாட்டி தான் அனைத்தையும் செய்திருக்கிறார். காவேரி அம்மாவிடம் நடக்கும் உண்மைகளை தெரிந்து கொண்ட விஜய் காவேரிக்காக அனைத்தையும் தூக்கி வீசி விட்டு, காவேரியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்.
ஏனெனின் விஜய்க்கு அவருடைய மனைவி மற்றும் குழந்தை வேண்டும். தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்காக சாரதா, விஜயை ஏற்றுக் கொள்வாரா? என்பதை இந்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
