மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய மகாநதி நடிகை.. நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா?
மருத்துவமனையில் இருந்து மகாநதி சீரியல் நடிகை தப்பி ஓடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மகாநதி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.
விஜய்- காவேரி இருவரும் திருமணம் செய்த பின்னர், வெண்ணிலா விஜய்யை தேடி மீண்டும் அவரது வாழ்க்கையில் வருகிறார். வந்தவர் விஜய்யை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என முயற்சி செய்து கடுமையாக போராடினார்.
இந்த சமயத்தில், தான் விஜய்யின் குழந்தை காவேரி வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே போன்று காவேரியின் அக்காவும் கர்ப்பமாக இருக்கிறார்.
காவேரி கர்ப்பமாக இருக்கும் விடயம் விஜய்க்கு தெரியும், ஆனால் காவேரி குடும்பத்தினருக்கு தெரியாது. வெண்ணிலாவின் வீண் போராட்டத்தின் விளைவாக மாடியில் இருந்து கீழே விழுந்து தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.
வயிற்றில் குழந்தையுடன் ஓடிய வெண்ணிலா
இந்த நிலையில், வெண்ணிலாவை விஜய் தான் கொலைச் செய்த முயற்சித்தார் என பொலிஸார் கடந்த சில வாரங்களாக தேடி வந்தார்கள்.
காவேரி தங்கையின் உதவியுடன் பொலிஸார் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். தன்னுடைய கணவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என முயற்சித்த வரும் காவேரி வெண்ணிலாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து கொண்டு தப்பிச் செல்கிறார்கள்.
காவேரியை தடுப்பதற்காக கொலைக்கார கும்பல் ஒன்று தேடி வருகிறது. வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷாலினி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
வயிற்றில் குழந்தையுடன் இது போன்ற காட்சிகளில் நடிப்பதை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |