இலங்கை தமிழில் ராப் பாடலை பாடி அசத்திய நடிகை பிரதீபா
சின்னத்திரை நடிகை பிரதீபா இலங்கை தமிழில் மெட்டு மாறாமல் ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரதீபா
விஜய் டிவியில் மகாநதி எனும் தொடரில் கங்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை பிரதீபா.
இந்த சின்னத்திரையில் நடித்ததன் பின்னர் பிரதீபாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.இவர் தனது இன்டா பக்கத்தில் அடிக்கடி தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை பாடி பதிவிட்டு வருவார்.
இவர், நடிப்பில் பலரை கவர்ந்ததால் இவருக்கு நடிப்பதற்கு அடுத்தடுத்த வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் மலையாள திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் மகாநதி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அந்த வகையில் இவர் தமிழில் மெட்டு அமைத்து பாடப்பட்ட பாடலை வரிகள் மாறாமல் இலங்கைத் தமிழில் ராப் மெட்டில் அசத்தலாக பாடியுள்ளார். இந்த வீடியொ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |