மகாளய பட்ச ரகசியம் - முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் வீட்டில் தோன்றும் 5 அறிகுறிகள்!
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில். ஒரு ஆண்டில் முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கு உகந்த காலமாக மகாளய பட்ச காலம் கருதப்படுகிறது.
இக்காலத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செய்வது, படையல் வைப்பது, அன்னதானம் செய்வது போன்ற வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டின் மகாளய பட்ச காலம் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் மக்கள் தங்கள் முன்னோர்கள் மீதான அன்பையும் மரியாதையையும் பல்வேறு வழிபாடுகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு செய்யப்படும் வழிபாடுகளால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்குவதாக நம்பப்படுகிறது. அப்படி முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகள் தென்படும் என்றும் தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக, முன்னோர்கள் சில உயிரினங்களின் வாயிலாக உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனவே, மகாளய பட்ச காலத்தில் இந்த 5 உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தாலோ அல்லது வழக்கத்தைவிட அதிகமாகக் கண்ணில் பட்டாலோ, முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த 5 உயிரினங்கள் என்னென்ன? அவை ஏன் முன்னோர்களின் வருகையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகாளய பட்ச பலன்கள்
பசு: மகாளய பட்ச காலத்தில் வீட்டின் வாசலில் பசு வந்து நின்றால், முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சியாக இருப்பதாக நம்பப்படுகிறது.எனவே, அதற்கு உணவளித்து பசியாற்றி ஆசியைப் பெறுங்கள். பித்ரு பட்சத்தில் பசுவுக்கு சேவை செய்வது முன்னோர்களை திருப்திப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
காகம்: பித்ரு பட்சத்தில் வீட்டின் முன் காகம் வருவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே, அதை விரட்டாமல் உணவளியுங்கள். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை காகத்திற்கு வழங்குவது, அது நேரடியாக முன்னோர்களைச் சென்றடையும் என்பது ஐதீகம்.
பாம்பு: மகாளய பட்சத்தில் வீட்டிற்குள்ளோ அல்லது சுற்றுப்புறத்திலோ பாம்பைக் கண்டால், அதைத் துன்புறுத்தாமல் நிபுணர்களின் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள். இந்தக் காலத்தில் பாம்பைக் காண்பது முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சியாக இருப்பதற்கான அறிகுறி என்றும் நம்பப்படுகிறது.
எறும்புகள்: மகாளய பட்சத்தில் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் எறும்புகளைக் கண்டால், அது நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. அவற்றிற்கு தானியங்களை உணவாக அளிப்பது, முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும் அவர்களின் சாபங்களில் இருந்து விடுபடவும் உதவும் என நம்பப்படுகிறது.
நாய்: மகாளய பட்சத்தில் நாய்க்கு உணவளிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் வாசலில் வழக்கத்திற்கு மாறாக நாய் சுற்றினால், அதை விரட்டாமல் உணவளியுங்கள். நாய் வீட்டிற்கு வருவது முன்னோர்கள் உங்களைப் பார்க்க வந்ததற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |