கன்னியில் சற்றுமுன் இணைந்த 4 கிரகங்கள்! மகாளய அமாவாசையால் ராஜவாக போகும் 5 ராசிகள் யார் யார் தெரியுமா?
இன்று மகாளய அமாவாசையாகும். இந்த அமாவாசை நாளில் 4 கிரகங்களின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது.
எப்படியெனில் ஏற்கனவே கன்னி ராசியின் புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணித்து வருகின்றன.
அதனுடன் இந்த அமாவாசை நாளில் சந்திரனும் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்வதால், கன்னி ராசியில் 4 கிரக சேர்க்கை உருவாகிறது.
இந்த மகாளய அமாவாசை 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமானதாக இருக்கும்.யார் இந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

மேஷம்
4 கிரகங்களின் சேர்க்கையால் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். திருமணமாகாதவர்கள், இந்த ஆண்டிற்குள் வாழ்க்கைத் துணையை பெறுவார்கள்.
ரிஷபம்
மகாளய அமாவாசை நாளானது இன்று உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உணர்வுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நீங்கும். இந்நாளில் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் இணக்கமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த 4 கிரக சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் திடீர் முன்னேற்றத்தைக் காணலாம்.
உங்கள் வாழ்க்கையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி சம்பந்தமாக கடந்த காலத்தில் உங்கள் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.