இருண்டு போயிருக்கும் வாழ்க்கையை மாற்ற பரிகாரம்- குங்குமம் இருந்தாலே போதுமாம்..
பொதுவாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் மங்களகரமான பொருட்கள் அனைத்திலும் மகாலட்சுமி இருக்கிறார்.
அப்படிப்பட்ட மங்கள கரமான பொருட்கள் நம்முடைய வீட்டில் இருக்கும் பொழுது அந்த இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள் எனக் கூறப்படுகின்றது.
அப்படி மகாலட்சுமி குடியிருக்கும் பொருட்களில் ஒன்று தான் குங்குமம். வீடுகளில் குங்குமம் இல்லாதவர்கள் வாங்கி வைத்து கொள்ளுங்கள். பலன் நிச்சயம் கிடைக்கும்.
அந்த வகையில் குங்குமத்தை வைத்து எப்படி வாழ்க்கையை மாற்றும் பரிகாரம் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம்
1. வீடுகளில் வெறும் குங்குமம் வைத்திருக்காமல் அதனுடன் தாழம்பூ சேர்த்து வைப்பது நல்லது. அதிலும் குறிப்பாக மகாலட்சுமி அல்லது அம்பிகைக்கு அர்ச்சனை செய்த பின்னர் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்து கொள்ளவும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை தரும்.
2. குங்குமத்தை வைக்கும் குங்குமச்சிமிழ் வெள்ளி, தங்கம் அல்லது தேக்கு மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதில், வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்குள் வெள்ளி, தங்க நாணயம் இருக்கும் பட்சத்தில் அதை போடலாம். இது போன்ற நாணயங்கள் இல்லாத பட்சத்தில் ஒரு ரூபாய் நாணயம் கூட போடலாம்.
3. வழிபாடு ஆரம்பிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு மகாலட்சுமியை போற்றிகளை 108 முறை “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி” என சொல்ல வேண்டும். ற்றிகள் தெரியாதவர்கள் “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ” என்றும் சொல்லலாம்.
108 முறை சொல்ல சிரமப்படுபவர்கள் 14 முறை சொல்லலாம். சொல்லி முடித்த பின்னர் குங்குமத்தை எடுத்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் எமக்கு கிடைக்கும். எந்த காரியம் செய்தாலும் நீங்கள் வெற்றியை மாத்திரம் காண்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |