2வது திருமணம்! சிறுவயதில் மகாலட்சுமி எப்படி இருக்காங்க பாருங்க
சமீபநாட்களாக டிரெண்டிங்கில் இருந்து வருகின்றனர் ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி, பலரும் இவர்களை விமர்சித்தும், வாழ்த்தியும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ரவீந்தர்- மகாலட்சுமி
மக்களால் ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல விஜே மற்றும் நடிகை மகாலட்சுமியை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி கோவிலில் வைத்து நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
தங்களது திருமண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு கருத்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் பேட்டிகள்
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதைக் கண்டுகொள்ளப்போவதில்லை என்றும், வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கான பதில் எனவும் இருவரும் தொடர்ச்சியாக பல்வேறு பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
பணத்துக்காக மகாலட்சுமி இப்படி செய்துள்ளார் என்றும் விமர்சனங்கள் எழாமல் இல்லை, ஆனால் தாங்கள் தங்களுடைய முடிவில் தெளிவாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மகாலட்சுமியின் சிறுவயது புகைப்படமொன்று வைரலாகி வருகிறது, அழகான குட்டி பாப்பாவாக ஜொலிக்கும் மகாலட்சுமிக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
