தினமும் 3 முறை நிறம் மாறும் சிவலிங்கம்! மர்ம கோவிலின் உண்மை என்ன?
இந்தியாவில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் உள்ள சிவலிங்கம் நிறம் மாறுவதாக கூறப்படுகிறது.
நிறம் மாறும் சிவலிங்கம்
புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கும் நாம், தற்போது ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுவதாக கூறப்படும் நிகழ்வினைக் குறித்து விரிவாக காணலாம்.
தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டடப்பட்டுள்ள நிலையில், இங்கே இருக்கும் சிவனை மக்கள் அச்சலேஷ்வர் மகாதேவப் என்று கூறுகின்றனர்.
மேலும் இக்கோவிலில் நந்தி சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு குடியிருக்கும் மக்கள், குறித்த நந்தி சிலை ஆயிரக்கணககான தேனீக்களை படையெடுப்பார்கள் மீது அனுப்பியதாக கூறப்படுகின்றது.
பின்பு படைபெயடப்பார்ளக் கோவிலை உடைக்காமல் திரும்பியுள்ளதாகவும், சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டறிய 100 அடிக்கு மேல் தோண்டியும் அதன் முனையை கண்டுபிடிக்கமுடியாததால், அகழாய்வினை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
நிறம் மாறுவது எப்படி?
இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தின் நிறம் ஒரே நாளில் மூன்று முறை மாறுகின்றதாம். காலையில் சிவப்பாக காட்சியளிக்கும், இந்த சிவன் சூரியன் உச்சிக்கு வரும் மதிய வேளையில் காவி நிறமாகவும், மாலையில் கோதுமை நிறத்திலும் மாறுகிறதாம்.
விஞ்ஞானிகளோ சூரியனின் கதிர்களால் சிவலிங்கத்தின் நிறம் மாறுவதாக கூறிவருகின்றனர்.