மகாபாரதம் பகுதி 7 - பீஷ்மர் பிறப்பு
மகாபாரதம் பகுதி 7 - பீஷ்மர் பிறப்பு
மகாபாரத போரை பற்றியும், அதனால் ஏற்பட்ட பேரழிவைப் பற்றியும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
குரு வம்சமே அழிந்து கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகை பாதியாக குறைத்த மகாபாரத போருக்கு காரணமாய் இருந்தது சகுனி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால்.. உண்மை அது கிடையாது... ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதத்தில் போருக்கு காரணமாய் அமைந்தனர்.
குருவம்சத்தின் அரசர்களில் மிகச் சிறந்த அரசன் பிரதிபன். இவர் அஸ்தினாபுரத்தின் மாமன்னன். இவருக்கு 3 மகன்கள்... மூத்தவராக பிறந்தவர் தேவபி. 2வது பிறந்தவர் திருதராஷ்டிரன். 3-வதாக பிறந்தவர் சாந்தனு.
மாமன்னன் பிரதிபன் கொஞ்சம் வித்தியாசமானவர். அவருக்கு அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்வதில் விருப்பம் இல்லை. ஆட்சியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு தவம் புரிய காட்டிற்கு செல்ல திட்டமிட்டார்.