300 ஆண்டு கழித்து சிவராத்ரியில் 12 யோகங்கள் - அதிர்ஷ்டம் 3 ராசிக்கு தான்
மகாசிவராதிரி நாளை வருகிற நிலையில் அதே நாளில் 300 வருடங்களின் பின்னர் அரிய 12 யோகங்கள் உருவாக உள்ளதாம்.
மகாசிவராத்திரி 12 யோகங்கள்
இந்த 2026ம் ஆண்டிற்கான சிவராத்திரி பிப்ரவரி 15ம் திகதி ஆரம்பமாகிறது. இந்த மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.
இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது பல மடங்கு பலனை தரும் எனப்படுகின்றது. பலரும் இந்த நாளில் விரதமிருந்து சிவனை கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.
இந்த நிலையில் ஜோதிடப்படி இந்நாளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் அரிய கிரக நிலைகளால் பல சுப யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகவுள்ளன என கூறப்படுகின்றது.
அதில் 12 சுபயோகங்களும் 4 ராஜயோகங்களும் எனப்படுகின்றது. இதனால் வெறும் 3 ராசிகள் மட்டுமே நன்மை பெறப்போகின்றது அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- மகா சிவராத்திரியில் உருவாகும் பல யோகங்களால் உங்களுக்க வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் உண்டாகும்.
- தொழில் ரீதியாக நீங்கள் முன்னேறி செல்வீர்கள்.
- இந்த கால கட்டத்தில் புதிய வேலை நல்ல லாபத்தை தரும். முயற்ச்சி செய்து பாருங்கள்.
- தற்போது வேலையில் இருக்கும் நபர்களுக்கு அந்த வேலையில் நல்ல வருமானம் கிடைக்கும்.
- முன்னேற்ற பாதை பிறக்கும்.
சிம்மம்
- மகா சிவராத்திரியில் உருவாகும் பல சுப மற்றும் ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பல முன்னேற்ற வழிகள் பிறக்கும்.
- நீங்கள் சிவ வழிபாடு செய்து இறைவனை மனதோடு நினைத்தால் உங்களுக்கு நல்வழி கிடைக்கும்.
- வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த பிரச்சனை எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
மகரம்
- இந்த சிவராத்ரி யோகங்கள் உங்களுக்கு பல நன்மைகளையும் சாதகங்களையும் கொடுக்கப்போகின்றது.
- எதிலும் பயம் இல்லாமல் முதலீடு செய்தால் அதற்கான பலன் கிடைத்தே தீரும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- குடும்ப உறுப்பினர்களிடையேயும் அன்பும் பெருகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).