2025 ஆம் ஆண்டின் மகா சிவராத்திரி எதிர்வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமான் பக்தர்கள் அதிகமாக கோயிலுக்கு செல்வார்கள்.
அவருக்கு உரிய நாளில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றது.
வழக்கமான நாட்களை விட இந்த நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், சிவனின் பரிபூர்ண ஆசி கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ஆனால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் சிறந்த பலன்கள் கிடைக்கவுள்ளது.
நடக்கப்போகும் மகா சிவராத்திரி நாளில் கும்ப ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி
| - புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
-
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
-
குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
- அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
|
ரிஷபம் ராசி
| - எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.
- வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
-
தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
-
அம்பிக்கையை வழிபட சிரமங்கள் குறையும்.
|
மிதுனம் ராசி
| - நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
-
பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
-
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
|
கடகம் ராசி
| - மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
-
செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
-
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
- அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
-
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
|
சிம்மம் ராசி
| - அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
- வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
-
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
|
கன்னி ராசி
| - பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
-
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
|
துலாம் ராசி
| - அதிர்ஷ்டகரமான நாள்.
- தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
- வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
- மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
|
விருச்சிகம் ராசி
| - இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
-
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
-
முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
|
தனுசு ராசி
| - சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
-
புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
- பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
- முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
|
மகரம் ராசி
| - பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
- சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
- மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
-
முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
|
கும்பம் ராசி
| - நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
- வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
- தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
|
மீனம் ராசி
| - எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும்.
- அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
- தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
- வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).