மகுடம் பட அழகுமணி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? லீக்கான புகைப்படம்
மகுடம் படத்தில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை பரவலாக பேசப்பட்ட நிலையில் அந்த காமெடியில் வரும் நடிகை அழகுமணியின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கவுண்டமணி
தமிழ் சினிமாவில், நக்கல், நையாண்டியால் ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் கவுண்டமணி.
இவர் சூப்பர் ஸ்டார் தொடங்கி கமல், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, அஜித், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நண்பனாக இணைந்து காமெடியில் நடித்துள்ளார்.
இதுவும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அந்த திரைப்படத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.
இவர்களின் நடிப்பில் ஏராளனமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றது.
மகுட திரைப்பட காமெடி
இந்த நிலையில், கடந்த 1992ம் ஆண்டு வெளியான மகுடம் படத்தில் கவுண்டமணி - செந்தில் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். செந்தில், கவுண்டமணி நகைச்சுவைக்காகவே இத்திரைப்படம் பல நாட்கள் தியேட்டரில் ஓடியது.
மேலும் திரைப்படத்தில் வரும் குறிப்பிட்ட திருமண காட்சி பலக் கோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அழகுராணி. இவரின் தற்போதையை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ அவரா? இவர்? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |