உழைப்பு தான் வாழ்க்கையின் முதல் படி: தொழிலாளர்கள் தினம் சிறப்பு!
உழைக்கும் ஆண்களும் உழைக்கும் பெண்களும் மிக அழகானவர்கள். அழகு என்பது முகத்தில் உள்ளது இல்லை.
அது உழைப்பில் தான் உள்ளது. தொழிலாளர் தினம் என்றாலே அனைவரும் பெருமைப்படும் ஒரு தினம் தான்.
அந்த தினம் எப்படி உருவானது? யார் எல்லாம் கொண்டாடலாம் மற்றும் இந்த தினத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் செயற்பாடுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
உழைப்பாளர்கள் தினம் உருவானது எப்படி?
1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாஷிங்டன் நகரில் தான் தொழிலாளர் மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் நாள் ஒன்றிற்கு 8 மணிநேர வேலை மற்றும் ஒரு வாரத்திற்கு 48 மணிநேர வேலை என பிரகடனப்படுத்தப்பட்டது.
மேலும் ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதிலும் 1881 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தில் பணி நேரங்கள் குறித்து எந்தவொரு தகவலுக் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் இரண்டாவது திருத்தத்தில் 9 தொடக்கம் 14 வயதுடைய குழந்தைகளுக்கு 7 மணிநேர வேலையும் பெண்களுக்கு 11 மணிநேர வேலையென கூறப்பட்டது. பின்பு நீண்டக்கால போராட்டத்திற்கு பிறகு 1948 ஆம் ஆண்டு 11 மணிநேர வேலை 8மணி நேரமாக குறைக்கப்பட்டது.
மேதினமானது ஒரு புரிதலுக்கான தினம் என்றும். இந்த தினத்தில் 8மணிநேர வேலை, தொழிலாளர்களின் நலன் கருதி போராடியவர்களை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தினமே தொழிலாளர் தினமாகவும், உலகளாவிய ரீதியில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த நாளாகவும் இது கடைப்பிடிக்கபடுகிறது.
உழைப்பாளர் தினம் கொண்டாடும் முறை
இந்த நாளிற்காக போராடியவர்களை நினைவுக் கூர்ந்து அவர்களை தரிசித்து, அவர்களது சிறப்புகள் பற்றி இளம் சந்ததியினருக்கு கூறுவதன் மூலம் இதைக் கொண்டாடலாம்.
உழைப்பாளர் தின சில வாழ்த்து செய்திகள்
- உடலை இயந்திரமாக்கி உழைப்பை உரமாக்கி உழைக்கும் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
- வாழ்க்கை எல்லாம் தன் குடும்பத்திற்காக உழைக்கும் நம் இல்லத்தரசிகளுக்கு உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துக்கள்.
- உயர்ந்த கரங்கள் உழைக்கும் கரங்கள் உழைப்பை மட்டுமே நம்பும் கரங்கள் உழைப்பால் முன்னேறும் கரங்களுக்கு எனது தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள்.
- உழைப்பின் வாசம் உழைப்பவனின் சுவாசம் இருக்கும் வரை அவன் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும் வீசிக் கொண்டேதான் இருக்கும்.
- உழைப்பின் பயனாக தன்மானத்தோடும் பலம்மோடும் வாழும் ஜீவன் உழைப்பாளர்களே. உழைக்கும் அனைத்து கரங்களுக்கும் மே தின நல்வாழ்த்துக்கள் நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இல்லை.
- உலகுக்கே ஒரே நாளில் ஓய்வு நாள் மாடாய் உழைத்து ஓடாய்த் செய்வான் தொழிலாளி.
- உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி உருவெடுத்த நாள் மே தினம். விரைப்பு எறிய விரல்கள் சேர்ந்து விடியல் கண்ட நாள் மே தினம் இது வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை விழி முன் காட்டிய ஓர் தினம்.
- எழுச்சியின் பொருளை எட்டு திசைகளிலும் எடுத்துச் சொன்ன நாள் மே தினம் இது கிளர்ச்சியை கண்டு கிரீடங்கள் நடுங்கிய நிகழ்ச்சியை உணர்த்தும் ஓர் தினம்.