செல்வத்தை அள்ளி தரும் கோவர்தன் பூஜை!
கோவர்தன் பூஜை என்பது தீபாவளி முடிந்து நான்காம் நாள் அனுஷ்டிக்கபடும் பூஜையாகும். இது இந்தியர்களின் பூர்வீக பூஜை வழிபாடு முறைகளில் ஒன்றாகும். கோவர்தன் பூஜை இந்த ஆண்டு நவம்பர் 15 அன்று வருகிறது.
கோவர்தன் என்ற வார்த்தைக்கு 'தானியக் குவியல்' என்று பொருள்படும், மேலும் இந்த பூஜை கோவர்தன் மலையை உயர்த்தி இந்திரனுக்கு எதிராக கிருஷ்ண பகவானின் வெற்றியைப் கொண்டாடும் விதமாக ஆதிகாலம் தொட்டு அனுஷ்க்கபடுகிறது.
கோவர்தன் என்ற பெயரின் சிறப்பு

கோவர்தன் என்ற வார்த்தை ஸ்ரீ கிருஷ்ணரால் உயர்த்தப்பட்ட கோவர்தன மலையிலிருந்து எடுக்கப்பட்டது. ‘கோ’ என்பது பசுவையும் மற்றும் ‘வர்தன்’ என்றால் ஜீவனாம்சம் குறிக்கிறது.
மேலும் ‘கோ’ என்றால் புலன்கள் என்றும், ‘வர்தன்’ என்பதற்கு ‘அதிகரிப்பு’ என்றும் பொருள், கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் ‘ஒருவரின் புலன்களை அதிகரிப்பது’என்ற பொருளை இந்த பெயர் உணர்த்துகிறது.
இந்து வரலாற்றில், இந்த நாள் இந்திரனுக்கு எதிரான கிருஷ்ணரின் வெற்றியைக் குறித்து நிற்கிறது. மனித வாழ்வின் அடிப்படைக் கூறுகளின் முக்கியத்துவமும் கோவர்தன் பூஜை எடுத்துக்காட்டுகிறது.
பூஜை அனுஷ்டிப்பு முறை
இயற்கை அன்னையின் அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளில், பக்தர்கள் அன்னகூடு பூஜையை என்று சொல்லக்கூடிய ஒரு பூஜையை செய்வார்கள்.
இதில் 56 உணவுப் பொருட்களைக் கொண்ட சப்பான் போகத்தை கிருஷ்ண பகவானுக்கு படைப்பார்கள். இதனால் பக்தர்களின் கஷ்டங்கள் நீங்கி புதிய பயணம் தொடங்கும் மற்றும் செல்வம் பெருகும் என்பது இந்தியர்களின் ஐதீகம்.
இந்த மாதிரியான பூஜைகளை பரம்பரையாக செய்து வருபவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.