மதுரை ஸ்டைல் முள்ளு முருங்கை ரொட்டி... செய்வது எப்படி?
அதிக சத்துக்கள் கொண்ட முருங்கைக் கீரையை அனைவரும் உட்கொண்டு வந்துள்ள நிலையில், முள்ளு முருங்கை குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
கல்யாண முருங்கை மற்றும் முள்ளு முருங்கை என்று அழைக்கப்படும் இதில், அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது. குழந்தைகளுக்கு சளி இருமல் பிரச்சனையை சரிசெய்யும்.
கற்பூரவல்லி இலையைப் போன்று அப்படியே சாப்பிடவும் செய்யலாம். அல்லது வேறு உணவாகவும் செய்தும் சாப்பிடலாம். ஆனால் முள்ளு முருங்கையில் ரொட்டி, தோசை செய்து சாப்பிடலாம்.
மதுரையில் பேமஸான முள்ளு முருங்கை வடை, ரொட்டியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
முள்ளு முருங்கை இலைகள் - தேவையான அளவு
மிளகு - ஒரு ஸ்பூன்
துளசி இலைகள் - தேவையான அளவு
அரிசி மாவு - 2 கப் (முள்ளு முருங்கை இலைகளுக்கு ஏற்ப இருந்தால் சுவையாக இருக்கும்)
செய்முறை
முதலில் முள்ளு முருங்கை இலைகளை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள காம்பை எடுத்துவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
பின்பு துளசி இலையினையும் கழுவி சேர்த்து, 2 ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுக்கவும்.
ஒரு கப் சுடு தண்ணீர் எடுத்து கொண்டு, அதில் மீதமுள்ள அரிசி மாவு, அரைத்த பேஸ்ட் சேர்த்து மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் மீண்டும் சுடு தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும். ரெடியான மாவில் எண்ணை சேர்த்து, ஒட்டாத அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும்.
சூடான எண்ணெயில் அப்பம் அளவிற்கு சிறிய வட்டமாக தோய்த்து பொறித்து எடுத்தால், முள்ளு முருங்கை ரொட்டி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |