மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா?
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள்.
அதிலும் அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள்.

எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாமல் ஒரு முறை மதுரை பாணியில் காரசாரமாக கொத்து கறி செய்து பாருங்கள்.
எவ்வாறு எளிமையாக படிடுறைகளில் சிக்கன் கொத்துகறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
அரைத்த சின்ன வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மல்லித்தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 1தே.கரண்டி

தாளிக்க தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வர மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி இலைகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய சிக்கனைச் சேர்த்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆதியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

அதனையடுத்து அதில் அரைத்த சின்ன வெங்காய விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
பிரஷர் வெளியேறியதும் மூடியைத் திறந்து, கரண்டியால் சிக்கனை நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும். சூடானதும் அதில் சோம்பைச் சேர்த்து நன்றாக பெரியவிட வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் உடைத்த வர மிளகாயைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பின்னர் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும்.

இப்போது சமைத்த சிக்கனைச் சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
அதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு மசாலா சிக்கனில் நன்றாக கலக்கும் வரை நன்றாக கலந்துவிட்டு, கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான், அசத்தல் சுசையில், சிக்கன் கொத்துக்கறி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |