என்னுடைய கடைசி ஆசை: வைரலாகும் மதுரை முத்துவின் வீடியோ
சிறந்த பேச்சாளர், நகைச்சுவையாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை முத்து.
சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபல்யமான நபர், இவரது எதார்த்தமான நகைச்சுவைக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இவரது முதல் மனைவி விபத்தில் தவறிவிட, தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் பரிதவித்து நிற்க, இரண்டு ஆண்டுகள் கழித்து தனது மனைவியின் தோழியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆண் பிள்ளையும் இருக்கிறது, வேலைகளுக்கு நடுவே சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டவர் மதுரை முத்து.
தற்போது தன்னுடைய பெற்றோர் மற்றும் முதன் மனைவிக்கு கோவில் கட்டி வருகிறாராம், 15 நாட்களில் அதன் திறப்பு விழா நடைபெறும் என கூறியுள்ளார்.
அத்துடன் ஏழை எளிய குழந்தைகளை தன் சொந்தசெலவில் தன்னுடைய இடத்திலேயே தங்கவைத்து வளர்க்கவும், பெரியவர்களுக்கு உதவவும் முடிவெடுத்துள்ளாராாம்.
மேலும் கோவிலுக்கு அருகே நூலகம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இவர் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.