மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு! இருவருக்கும் விவாகரத்து உண்மையா?

Manchu
Report this article
காமெடி நடிகரும், பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம்வரும் மதுரை முத்து அவரது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை முத்து
பட்டிமன்ற பேச்சாளராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வரும் மதுரை முத்து, தனது சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை கடந்து வந்தாலும் மக்களை எப்பொழுதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
மதுரை முத்து முதல் முதலாக லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
ஆனால் இவர்களது வாழ்க்கை அவ்வளவாக நீடிக்கவில்லை. ஆம் கடந்த 2016ம் ஆண்டு கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது மனைவி மரணமடைந்தார்.
மனைவியின் இறப்பு பெரிய அளவில் பாதித்த நிலையில், பின்பு திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். பின்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவதாக முதல் மனைவியின் தோழியான நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.
மனைவியின் அதிர்ச்சி பதிவு
இந்நிலையில் நீத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தெடர்ந்து சோகமான பதிவுகளையே வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, தற்போது நீத்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் "எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த பதிவு தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரை முத்துவின் மனைவி நீத்து அவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாரா என்றும், இருவரும் விவாகரத்து பெற போகிறார்களா? என்று கேள்வி எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
