அடங்காமல் வரும் காளை... விடாமல் துரத்தும் வீரர்கள்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை காட்சி
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் நேரலையை ஐபிசி தமிழ் சேனலின் மூலம் காணொளியாக காணலாம்.
வீர விளையாட்டுகளில் ஒன்றான மதுரை ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டியான இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கின்றது.
பொங்கல் தினமான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

சுமார் 1100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் களத்தில் விளையாடுகின்றனர். ஒவ்வொரு சுற்றாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் வீரருக்கு காரும், வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும் வழங்கப்பட உள்ளது.
இதுவரை ஐந்து சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில், 464 மாடுகள் களம் கண்டுள்ளது. இதில் 109 மாடுகள் மட்டுமே பிடிபட்டுள்ளது. இதுவரை பார்வையாளர் ஒருவர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |