கோடையில் வேகமாக பரவும் கண் நோய்... இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே கண் நோயாக பரவும் மெட்ராஸ் ஐ குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடையில் பரவும் கண் நோய்
தற்போதைய சூடான காலநிலை காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்றுநோய் வேகமாக பரவி வருகின்றது.
இந்தியாவில் சென்னை போன்ற பகுதியில் இந்நோய் அதிகமாக பரவி வருகின்றது. இந்நோயானது அடினோ வைரசால் ஏற்படுகிறது.
இவை தும்மல், இருமல், தொடுதல் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. கண் எரிச்சல், கண் சிவத்தல், நீர் வருதல், இமை ஒட்டல் போன்றவை முக்கிய அறிகுறிகள்.
முன்னெச்சரிக்கை என்ன?
தொண்டை மற்றும் கண்களை தாக்கும் இந்த நோய், 10-14 நாட்களில் இயல்பாகவே குணமாகிவிடுமாம். ஆனால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, கண்களில் தாய்ப்பால் போடுவது போன்ற செயல்களை மக்கள் அதிகமாக செய்து வரும் நிலையில், இந்த செயல் தீவிர விளைவுகளை ஏற்படுத்துமாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூடும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணியவும்.
கைகளை சுத்தமாகவும், சத்தான உணவுகளையும் எடுததுக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களிடையே எளிதாக பரவும் இந்நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |