இலங்கை பெண் மதுவா இப்படி... இந்த நேரத்தில் இது தேவையா? சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
ஜெர்மனியை சேர்ந்த இலங்கை தமிழரான மதுமிதா வெளியிட்ட ஒற்றை புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா நேற்று அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் மதுமிதா மதுக்கிண்ணத்தின் முன் உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவின் தமிழை ரசிக்காத ரசிகர்கள் இருக்க முடியாது. அந்த அளவு அவர் கொஞ்சி பேசும் தமிழுக்கு ரசிகர்கள் அதிகம்.
இதனால் தமிழ் ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மதுவுடன் இருக்கும் புகைப்படத்தினை பார்த்து அவருக்கு ரசிகர்கள் அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.