நடிகர் மாதவன் மகனின் அபார சாதனை! தங்க பதக்கத்துடன் வெளியான புகைப்படம்
நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நடிகர் மாதவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் மாதவன், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்து மக்களை கவர்ந்து வருகின்றார்.
கடந்த ஆண்டில் கூட மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.
ஒருபுறம் நடிப்பில் மாதவன் நடிப்பில் கலக்கி வரும் நிலையில், மற்றொரு புறம் அவரது மகன் விளையாட்டில் சாதனை செய்து வருகின்றார். ஆம் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்றுள்ளார்.
நீச்சல் போட்டியில் சாதனை
அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 5 ஆவது கேலோ இந்தியா யூத் விளையாட்டு (22 வயதுக்குட்பட்ட) போட்டிகளில் வேதாந்த் மாதவன் பதக்கங்களை வென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஆண்களுக்கான 200 மீற்றர் நீச்சல் போட்டியில் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக கலந்து கொண்டதுடன், தங்கம் மற்றும் வெள்ளி பிரிவுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளங்களில் மகனின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் லைக்ஸைக் குவித்து வருகின்றனர்.