தமிழ் நடிகர் மாதவனின் மகன் செய்த புதிய சாதனை - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்! குவியும் பாராட்டுக்கள்
தமிழ் நடிகர் மாதவனின் மகன் வேதந்த் நீச்சல் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
ராக்கெட்ரி படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் மாதவன், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதன்படி நடிகர் மாதவனின் மகன் வேதந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளாராம்.
1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட வேதந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
மகன் நீச்சல் போட்டியில் சாதனை படைத்தபோது எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் .
நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவனின் மகன் வேதந்த்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
Never say never . ???❤️❤️?? National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️??@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022