சுவையில் பிரமாதம்: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் சின்ன வெங்காய பணியாரம் ரெசிபி இதோ
நாம் வீட்டில்பல உணவுகளை செய்திருப்போம். நாம் மூன்று வேளை உணவுகளைசெய்து சாப்பட்டாலும் மாலை நேரங்களில் ஏதாவது ஒரு உணவு சாப்பிட வேண்டியது இருக்கும்.
இதற்காக நாம் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை. நமக்கு புது விதமான உணவுகள் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். அப்படி ஒரு உணவு தான்சின்ன வெங்காய பணியாரம்.
இதை பலரும் செய்திருக்கலாம். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும். இது ஆரோக்கியமாகவும் சுவையாகவும் பார்க்கப்படுகின்றது.
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1 இட்லி அரிசி
- உளுந்து முக்கால் கப்
- அரை ஸ்பூன் வெந்தயம்
- உப்பு 3 ஸ்பூன்
- எண்ணெய்
- 25 சின்ன வெங்காயம்
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- அரை ஸ்பூன் உளுந்து
- 1 கையளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
செய்யும் முறை
முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின்னர் இந்த ஊறவைத்ததை எடுத்து இட்லி மாவு பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதை குறைந்தத எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இன்னும் ஒரு பாத்திரத்தை அடப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சீரகம், கடுகு, கடலை பருப்பு, சின்ன வெங்காயம் நறுக்கியது, உளுந்து, சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இது நன்றாக ஒரு பதத்தில் வதங்கியதும் ஊறவைத்த மாவை எடுத்து அதில் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதன் பின்னர் நீங்கள் பணியாரம் செய்யும் பாத்திரத்தில் சேர்த்து எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்து கொள்ளவும்.
இப்படி செய்து எடுத்தால் வாசனையும் பிரமாதமாக இருப்பதுடன் ஆரோக்கியமான சுவையான பணியாரம் தயார்.
இதே உணவை நாம் கடைகளில் வாங்கும் போது அது உடலில் பல நோய்களை கொண்டு வரும்.
சிலர் இந்த பணியாரங்களை பொறித்து எடுப்பதற்கு பல நாள் உபயோகப்டுத்திய எண்ணெயை பயன்படுத்துவர்.
இது உடலில் பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கும், ஆனால் நாம் வீட்டில் தயாரித்து உண்ணும் போது ஒரு நல்ல உணவை நாம் உண்ண முடியும். எனவே இந்த ரெசிபி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |