பலக்கோடி செலவில் பிரமாண்ட வீட்டைக் கட்டும் மாதம்பட்டி ரங்கராஜ்: யாருக்காக தெரியுமா?
மாதம்பட்டி ரங்கராஜ் சொந்த ஊரில் பங்களா மாதிரி பெரிய வீடு கட்டி வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
தன்னுடைய வாழ்க்கை பயணத்தை நடிகராக ஆரம்பித்து தற்போது சமையல் கலைஞராக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் முக்கிய நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சமீபக் காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரமாண்டமாக கட்டப்படும் வீடு
அந்த வகையில், மாதம்பட்டி ரங்கராஜ் அவரது சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.
இந்த வீட்டை தன்னுடைய தாய், தந்தைக்காக கடந்த 3 ஆண்டுகளாக கட்டி வருதாக கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்புக் கொண்ட மாதம்பட்டி தங்கராஜ், “தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
குறித்த நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் சேவை தொடர்ந்து வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஆரம்ப காலங்களில் மெகந்தி சர்க்கஸ் மற்றும் பென் குயின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |