யாரு சாமி இவரு... சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்
கோயம்புத்தூரின் நம்பகத்தன்மை டெல்லியின் நேர்த்தியுடன் ஒத்துப்போகிறது. தென்னிந்தியாவின் மனதைத் தொடும் சுவைகளை தலைநகருக்குக் கொண்டுவருகிறது.
கோயம்புத்தூரிலிருந்து கன்னாட் இடத்திற்கு ஒரு சுவை பயணம்.. என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இறுதிவரை பங்கேற்று தனது பயணத்தை வெற்றிகரமாக முடிவு செய்திருந்தார்.
ஒரு புறம் ஜாய் கிரிஸில்டாவின் பிரச்சினைகள் போய்கொண்டிருந்தாலும், அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் மாதம்பட்டி ரங்கராஜ் தனது தொழிலில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில், தற்போது தென்னிந்தியாவின் மனதைத் தொடும் சுவைகளை தலைநகருக்குக் கொண்டுவருகிறது என மதம்பட்டி டிஃபன் சென்டரின் புதிய கிளையின் திறப்புவிழா காணொளியை பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |