முதல் மனைவியுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்! படு வைரலாகும் புகைப்படம்
சர்ச்சைக்கு மத்தியில் ஜோடியாக போஸ் கொடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி பிரியாவுடன் தற்போது வெளியிட்டுள்ள ஒற்றை புகைப்படம் இணையத்தில் மீண்டும் புதிய புயலை கிளப்பியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான். தற்போது மாதம்பட்டடியின் ஆண் குழந்தையொன்றுக்கு தாயான நிலையில், ஜாய் இன்றளவும் தன் குழந்தைக்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றார்.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அண்மைக்காலமாக அதிகம் அடிப்படுகின்றது.இவருக்கு எதிரான விமர்சனங்களும் இணையத்தில் வலுபெற்றுள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இறுதிவரை பங்கேற்று தனது பயணத்தை வெற்றிகரமாக முடிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், ஜாய் கிரிஸ்சில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தை தன்னுடைய இல்லை என்றும் DNA பரிசோதனைக்கு தயார் என்றும் தைரியமாக அறிக்கை விட்டார்.

ஆனால் பரிசோதனைக்கு இன்னும் செல்லவில்லை.அதனால் குழந்தைக்கு நியாயம் கேட்டு ஜாய் தற்போது வரையில் போராடி வருகின்றார்.

இந்நிலையில், கொஞ்சமும் தயக்கமின்றி தனது முதல் மனைவி ஸ்ருதி பிரியாவுடன் ஜோடியாக போஸ் கொடுத்து தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. அதற்கு ஜாய் எவ்வாறு பதில் கொடுக்கப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பும் நெட்டிசன்கள் மத்தியில் வலுபெற்றுள்ளது.