மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி நினைத்தால் இது முடியும்! வைரலாகும் காணொளி
அண்மைகாலமாக இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வரும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதனால் நெட்டிசன்கள் மத்தியில், ரங்கராஜிக்கு எதிரான விமர்சனங்கள் வலுத்துள்ளது.

Single Pasanga: நாங்களும் Hero தான் : பழைய பாடல்களை ரீகிரியேட் செய்த போட்டியாளர்கள்! வைரலாகும் promo
இந்நிலையில், இந்த சர்ச்சையில் மாதம்பட்டிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து ஒரு பெண் வழக்கறிஞர் பேசியிருக்கும் விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவர் குறிப்பிடுகையில், முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் ஏன் இவர்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை என கேள்வியெழுப்பியிருந்தார்.
ஜாய் குறிப்பிடும் அனைத்து விடயங்களையும் கேட்கும் போது, ரங்கராஜ் முதல் மனைவி இருக்கும் போதே, சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, காதல் என்ற பெயரில் ஜாய் கிரிஸில்டாவை திட்டம் போட்டு ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவருகின்றது.
விவாகத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்திருப்பதால், இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்பது ஜாய் கிரிஸில்டாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த விடயத்தில் ஜாய் கிரிஸில்டாவிற்கு நியாயம் கிடைக்காது.
ஆனால் ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதி நினைத்தால் ரங்கராஜிக்கு 7 ஆண்டுகள் வரையில், சிறை தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |