2 ஆவது மனைவி 6 மாத கர்ப்பம்.. மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஜனவரி மாதமே முடிந்ததா?
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.
முதல் மனைவியான ஸ்ருதியுடன் அவர் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்கவில்லை என கூறப்படும் நிலையில், இந்த இரண்டாவது திருமணம் குறித்து பெரும் சர்ச்சை நிலவிவருகின்றது.
இந்நிலையில் ஜாய் தனது இன்ஸ்டா பயோவில் வைத்திருக்கும் விடயம் மேலும் இந்த விடயத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள் என பலரது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்துகொடுக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்கை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறித்த திருமணம் கோவிலில் மிக எளிமையான பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை ஜாய் கிரிசல்டா பகிர்ந்து, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், அவருடைய முதல் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என குறிப்பிடடுள்ளார்.
இந்த சர்ச்சைக்கே முடிவு கிடைக்காத நிலையில் ஜாய் கிரிசல்டா இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கழுத்தில் தாலியுடன் இருப்பது, இவர்களின் திருமணம் முன்னதாகவே நடந்துவிட்டதா என்ற சந்தேகத்தை மேலும் தூண்டுகிறது.

