மாதம்பிட்டி ரங்கராஜரின் முதல் மனைவி யார் தெரியுமா? முழு விபரம் இதோ
மாதம்பட்டி ரங்கராஜ் இன் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் யார் என்பது பற்றிய தகவல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
மாதம்பட்டி ரங்கராஜ் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவராகப் பணியாற்றி வருகிறார். இவர் மாதம்பட்டி தங்கவேலு விருந்தோம்பல் நிறுவனம் என்ற பிரபல கேட்டரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார்.
சமையல் கலை மீது சிறுவயதிலேயே கொண்ட ஈர்ப்பு காரணமாக, இன்று திரையுலகிலும், சமையல் விருந்துகளிலும் புகழ்பெற்றவர் ஆனார். 'மெகந்தி சர்கஸ்', 'பென்குயின்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்தி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்களின் வீட்டு விழாக்களில் இவர் சமையல் செய்துள்ளார். ரங்கராஜ் தாமிரபரணி நதியின் தண்ணீரை அரசு அனுமதியுடன் கொண்டு சென்று, அதைச் சமையலில் பயன்படுத்துகிறார்.
செயற்கை நிறம், மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்களை தவிர்த்து, இயற்கையை சார்ந்த சத்தான உணவையே தயாரிக்கிறார்.
ஸ்ருதி ரங்கராஜ் யார்?
ரங்கராஜின் வாழ்க்கைத்துணைவியான ஸ்ருதி ரங்கராஜ் கோவையைச் சேர்ந்தவராவார். இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஃபேஷன் டிசைனிங் பட்டதாரி.
கடந்த செப்டம்பர் மாதத்தில் சட்டப்படிப்பை முடித்த ஸ்ருதி, தற்போது கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். அவர்கள் இருவருக்கும் 11 மற்றும் 9 வயதுடைய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ருதி ரங்கராஜ், திராவிட சிந்தனையுடன், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துகளை பின்பற்றி நடக்கும் நுண்ணறிவாளர். இவரது எண்ணங்களும் சமூகப் புரிதல்களும், குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒரு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |