யூடியூபர் பப்ஜி மதன் கைது: பொலிசாரின் காலில் விழுந்து கதறிய கொடுமை
யூடியூப் சேனில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்த நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்துள்ள நிலையில், பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்த போது மதன் தலைமறைவாகியுள்ளார். அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30ம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிசாருக்கு பயந்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை இன்று கைது செய்தனர்.
தற்போது சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசில் சிக்கிய உடன், நான் செய்தது தவறு என பொலிசாரின் காலில் விழுந்து மதன் அழுது கெஞ்சியதாகவும், அவரது குற்றத்தினை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
