அதிஷ்டம் தரும் மச்சங்கள்.. ஆண்களுக்கு எங்கு இருக்க வேண்டும் தெரியுமா?
பொதுவாக அதிஷ்டம் நிறைந்தவர்களை “ மச்சக்காரன்” என பலரும் கூறுவார்கள்.
சாமுத்திரிகா லட்சணப்படி மனிதர்களின் உடலுள்ள மச்சங்களுக்கேற்ப அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் அதிஷ்டங்கள் மாறுகின்றன.
ராகு கேது கிரகங்களும், ரத்தத்திற்கு காரகரான செவ்வாயும் மச்சத்திற்கு காரணமாகின்றன. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக ராகு கேது தொடர்பு பெற்று சனி பார்வை பெற்றால் மச்சம் அதிகமாக இருக்கும் என்கிறது ஜோதிடம்.
சில குழந்தைகள் பிறக்கும் போதே ஒரு சில இடத்தில் மச்சத்தத்துடன் பிறக்கிறார்கள். இது பார்ப்பதற்கு சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகவும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இவ்வாறு இருக்கும் மச்சங்கள் குழந்தைகள் பிறந்து வளரும் வரை அதிஷ்டத்தை கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.
அந்த வகையில் ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
மச்சங்களும் விளக்கங்களும்
1. முகத்தில் மச்சம்
ஆண்களின் முகத்தில் புருவங்களுக்கு நடுவில் மச்சம் இருப்பின் அவர்கள் தீர்க்காயுளை பெறுவார்கள். இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். அதே போல் வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அழகையும் அதிஷ்டத்தையும் கொண்ட கொண்ட மனைவி அமைவார்களாம். மேலும் ஆண்களின் கன்னங்களில் மச்சம் இருந்தால் வசீகரிக்கும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.
2. கண்களில் மச்சம்
கண்கள் என கூறும் பொழுது வெண்படலத்தின் கீழ் புறமாக மச்சம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொடுமையாக இருக்கும். அதே போல் வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
கண்களுக்கு வெளியில் இருந்தால் அவர்களின் வாழ்க்கை சீராக இருக்கும். மாறாக இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். அந்த வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
3. மூக்கு நுனியில் மச்சம்
பொதுவாக மூக்கில் மேல் மச்சம் இருந்தால் அதிஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் நம்பாமல் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை கொண்டவர்கள், தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், மற்றும் கர்வம், பாதுகாக்கும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
4. உதட்டில் மச்சம்
உதட்டில் மச்சம் உள்ளவர்கள் காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல் ஆண்களுக்கு வாயில் மச்சம் இருந்தால் புகழ், பணம், நல்ல மதிப்பு படைத்தவர்களாக காணப்படுவார்கள்.
5. காதில் மச்சம்
வலது காதில் மச்சம் இருப்பவர்கள் தண்ணீரில் கண்டம் அடிப்படுவார்கள். இதே வேளை இடது காதில் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவருக்கு எளிதாக கிடைக்கும் என கூறப்படுகின்றது.