மச்சம் கூறும் செய்தி என்ன? பலரும் அறியாத தகவல்
மனித உடலில் எங்கு வேண்டுமானாலும் மச்சம் இருக்கலாம். மச்சம் அதிர்ஷ்டமானவை என்று அனைவரும் கூறக் கேட்டிருப்போம்.
அது எந்தளவுக்கு உண்மைத் தன்மை வாய்ந்தது என்பது தெரியாது. ஆனால், இங்கு மச்சம் இருந்தால் இவ்வளவு நன்மைகள் உண்டு.
சரி இப்போது பெண்களின் உள்ளங்கை, முழங்கை, கைகள், விரல்கள் என்பவற்றில் உள்ள மச்சங்கள் என்னென்ன பலனைக் கொடுக்கும் என்பதைப் பார்ப்போம்.
தோள் மற்றும் முழங்கையிலுள்ள மச்சம்
பெண்ணின் இடது கை பக்க தோளில் இருக்கும் மச்சம், அவரது பறந்த மனப்பான்மையையும் தான தர்மம் செய்யும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
இடது முழங்கையில் இருக்கும் மச்சம் அவர்களது தைரியத்தையும் திறமையையும் பறைசாற்றுகிறது.
உள்ளங்கை மற்றும் மணிக்கட்டு மச்ச பலன்கள்
பொதுவாக பெண்ணின் உள்ளங்கையில் மச்சம் இருந்தால், இவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்குமென்று கூறுப்படுகிறது. அது மட்டுமின்றி தேவையில்லாதவற்றை பேசி நல்லவர்களை பகைத்துக் கொள்வார்களாம்.
இடது உள்ளங்கை மச்சம், அவர்கள் வாழ்வில் துன்பங்களை சந்திக்க நேரலாம், அனுபவசாலிகளாக இருப்பார்கள், பழகுவதற்கு இனிமையானவர்களாக இருப்பார்கள்.
விரலில் உள்ள மச்ச பலன்கள்
வலது புறங்கையில் இருக்கும் மச்சம் அவர்கள் மற்றவர்களிடம் நட்போடு பழக விரும்புவார்கள் என்பதைக் குறிக்கிறது.
இடது புறங்கையில் இருக்கும் மச்சம் அவர்கள் பல பேரிடம் விரோதத்தை வளர்த்துக் கொள்வார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
வலது கை கட்டை விரலில் இருக்கும் மச்சம் அவர்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பதை கூறுகிறது.
இடது கை கட்டை விரலில் இருக்கும் மச்சம் அவர்கள் மற்றவர்களிடம் நேர்மையை பின்பற்றுவார்கள் என்பதை குறிக்கிறது.
வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் அவர்கள் ஒருவரையும் சரிவர புரிந்துகொள்ள மாட்டார்களாம்.
இடது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள்.
இடது கை நடுவிரலில் இருக்கும் மச்சம் அவர்களின் தெய்வ பக்தியை வெளிக்காட்டுகிறது.
வலது கை மோதிர விரலில் இருக்கும் மச்சமானது, மற்றவர்களுடன் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவதை குறிக்கும்.
இடது கை மோதிர விரலில் உள்ள மச்சமானது குறிப்பிட்ட நபர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுமென கூறப்படுகிறது.
இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை வசதியாக இருக்கும்.