மாநாடு பட வெற்றிக்கொண்டாட்டம்: வெளியான சிம்புவின் கலக்கல் புகைப்படம்
சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள நிலையில், இந்த வெற்றியினை நடிகர் சிம்பு கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "மாநாடு" திரைப்படம் 24ம் திகதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. பல வித போராட்டங்களை சந்தித்த பின்பே இப்படம் வெளியாகியுள்ளது.
காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அதன் பிறகு ஆரம்பித்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாளிலேயே நல்ல வசூலையும் பெற்றது.
இந்நிலையில் குறித்த படம் வெற்றியினைத் தொடர்ந்து, நேற்று மாநாடு பட குழூவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். சுரேஷ் காமாட்சி சிம்புவிற்கு கேக் ஊட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

